சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.;

Update:2022-08-10 16:47 IST

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அண்ணாநகர், திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் மேம்பால பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்பு மேயர் பிரியா நிருபர்களிடம் கூறும்போது, "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகின்றது. ராயபுரம் மண்டலத்தில் நடந்து வரும் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும்.

ரெயில்வே துறை சார்ந்த பகுதியில் மேம்பால பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என ரெயில்வே துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மேம்பால பணிகளையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்குள் முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த ஆய்வின்போது திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்