பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்ட தீயணைப்பு துறையினர்

கீழ்வேளூரில் பள்ளத்தில் விழுந்த குதிரையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

Update: 2023-04-07 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது .நேற்று சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பெரிய பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் இரண்டும் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் விழுந்து கிடப்பதாக கீழ்வேளூர் தீயணைப்புத்துறையினருக்கு சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த குதிரைக்கு முதலுதவி செய்யப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினர் நடமாடும் கால்நடை மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கால்நடை டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் அங்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர், குதிரைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர் .

Tags:    

மேலும் செய்திகள்