மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

தூத்துக்குடி அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

Update: 2022-06-26 16:42 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருடைய மகள் முத்துமாரி (32). இவருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேதாஜி நகரை சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துமாரி இறந்து விட்டதாகவும், அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைத்துள்ளதாகவும் செல்வராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக செல்வராஜ் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்