விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை

Update: 2022-11-18 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லிபாபு போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கிய வீட்டுமனை பட்டாவை கிராம வருவாய் கணக்கில் திருத்தம் செய்து பட்டா வழங்ககோரி 2017-ம் ஆண்டில் வருவாய் துறையிடம் மனு கொடுத்து இதுநாள் வரை பட்டா வழங்காததை கண்டித்தும், சின்னகொள்ளியூர், எடுத்தனூர், சீர்ப்பனந்தல் கிராமங்களில் தற்போது பட்டா தயார் நிலையில் உள்ள கிராமங்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும், வாணாபுரம், மரூர், பெரியகொள்ளியூர், கடம்பூர், நாகல்குடி, அவிரியூர் கிராமங்களின் வருவாய் கணக்கில் திருத்தம் செய்து பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, செயலாளர் ஸ்டாலின் மணி, பொருளாளர் ஆறுமுகம் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் பழனி, சிவாஜி, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 90 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்