விவசாயி இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு

அரக்கோணம் அருகே விவசாயி இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-06-29 13:31 GMT

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 81), விவசாயி. இவரது மனைவி இந்திராணி (74). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், முனுசாமி வயது முதிர்வின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் அவரது மனைவி இந்திராணி துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அடுத்தநாள் காலை இறந்து விட்டார். கணவன், மனைவி அடுத்தடுத்த நாளில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்