வெள்ளத்தில் சிக்கிய விவசாயி சாவு

வெள்ளத்தில் சிக்கிய விவசாயி சாவு

Update: 2022-10-18 20:59 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காயம்பூ (வயது 45). திருமணம் ஆகாதவர் விவசாயி. இவர் தோட்டத்தில் விவசாய பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நொண்டி கோசில் ஓடையை காயம்பூ கடக்கும்போது வெள்ள நீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். அவரை அவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு மேட்டுப்பட்டி சுடுகாடு அருகில் உள்ள கால்வாயின் கரையில் அவரது உடல் ஒதுங்கி இருந்து தெரியவந்தது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்