விபத்தில் விவசாயி பலி

சாயல்குடி அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2023-08-20 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே மணிவலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (வயது 60) விவசாயி, இவர் நேற்று இரவு சாயல்குடியில் இருந்து ஆட்டோவில் பின்னால் அமர்ந்து ஊருக்கு சென்றார். சாயல்குடி- கமுதி சாலையில் எஸ்.கீரந்தை பஸ் நிறுத்தம் பகுதியில் ஆட்டோ சென்ற போது சாயல்குடியில் இருந்து சென்ற இருசக்கர வாகனம் ஆட்டோவின் பின்னால் மோதியது. பின்னால் அமர்ந்திருந்த முத்துமணி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாயல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்