பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..! 23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற பனியன் அணிந்து மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு...வெற்றி பெற்றவர்கள் விவரம்...
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு
பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டு: அதிக காளைகளை பிடித்து 3-வது இடத்தில் இருந்த வீரர் அரவிந்த் ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
உயிரை காப்பாற்றிய புது சேர்... ஒரே குத்தில் தூக்கி வீசிய காளை - ஜல்லிக்கட்டில் பரபரப்பு சம்பவம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4 ம் சுற்று முடிவில் 16 காளைகளை அடக்கி மணி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 11 காளைகளை அடக்கிய ராஜா 2ம் இடத்திலும், 9 காளைகளை அடக்கிய அரவிந்த் 3ம் இடத்திலும், 9 காளைகளை அடக்கிய வாஞ்சிநாதன் 4ம் இடத்திலும் உள்ளனர். 3ம் சுற்று முடிவில் 414 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று முடிவில் 15 காளைகளை அடக்கி மணி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 11 காளைகளை அடக்கிய ராஜா 2ம் இடத்திலும், 9 காளைகளை அடக்கிய வாஞ்சிநாதன் 3ம் இடத்திலும் உள்ளனர். 3ம் சுற்று முடிவில் 305 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டு - வாடிவாசல் களத்தை கலக்கிய காளை