பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..! 23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்

Update: 2023-01-16 02:22 GMT
Live Updates - Page 2
2023-01-16 04:59 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு 2ம் சுற்று முடிவு; இருவர் முதலிடம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 2ம் சுற்று முடிவில் 9 காளைகளை அடக்கி ராஜா, மணி ஆகியோர் முதலிடம் பிடித்து உள்ளனர்.6 காளைகளை பிடித்து அரவிந்தராஜ் 3ம் இடம் பிடித்து உள்ளார்.4 வது இடத்தில் 6 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் உள்ளார்.

2023-01-16 04:48 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்

மதுரை:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

2023-01-16 04:42 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு: 2ம் சுற்று நிறைவு


பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2ம் சுற்று முடிவில், 9 காளைகள் பிடித்து பாலமேட்டை சேர்ந்த ராஜா, மணி ஆகிய வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். 8 காளைகள் பிடித்து அரவிந்த் 2வது இடத்தில் உள்ளார். 

2023-01-16 04:30 GMT

‘துணிவு’ பட வில்லன்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: குடும்பத்துடன் பார்த்த ‘துணிவு’ பட வில்லன் ஜான் கொக்கேன் 

2023-01-16 04:20 GMT

4 பேர் படுகாயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 பேர் படுகாயம்

2023-01-16 03:33 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் முன்னிலை நிலவரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று முடிவில், 7 காளைகள் பிடித்து பாலமேட்டை சேர்ந்த ராஜா முதலிடத்தில் உள்ளார். 6 காளைகள் பிடித்து அரவிந்த் 2வது இடம், 3 காளைகள் பிடித்து அஜித்குமார் 3வது இடத்தில் உள்ளார். முதல் சுற்று முடிவில் 92 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்