அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.;

Update:2023-06-14 01:39 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. இதேபோல அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிலும் சோதனை நிறைவடைந்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் வந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சூழலில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக கரூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக சிலருக்கு அதிகாரிகள் சம்மன் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்