சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் மாற்றி நடப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் மாற்றி நடப்பட்டது

Update: 2023-08-03 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் சாலையின் நடுவே மின் கம்பம் ஒன்று இருந்தது. இந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பின்னர் இதுகுறித்த செய்தி கடந்த 2-ந் தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைஅடுத்து அன்றைய தினமே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றினர். பின்னர் அதே பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாதவாறு வேறு இடத்தில் அந்த மின்கம்பத்தை நட்டனர். அதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை மாற்றி நட்ட மின்வாரியத்திற்கும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தெற்கு தெரு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்