மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது

Update: 2022-06-19 20:09 GMT

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் வெண்ணாற்றங்கரையில் மதுவிற்பனை செய்யப்படுவதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வெண்ணாற்றங்கரை பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பூதலூர் விஜய் நகரைச் சேர்ந்த விஜயகாந்த (வயது37) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்தை கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்