லாரியின் பின்புறத்தில் கார் மோதி டிரைவர் பலி

லாரியின் பின்புறத்தில் கார் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-09-16 18:45 GMT

திருச்சி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). டிரைவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் வெங்ககல்பட்டி அருகே காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் சந்தோஷ் ஓட்டி சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்