வாகனம் மோதி டிரைவர் உடல் நசுங்கி பலி

வாகனம் மோதி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Update: 2022-07-21 22:07 GMT

தொட்டியம்:

தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் குடித்தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் அறிவு என்ற சுரேஷ்குமார்(வயது 33). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சுரேஷ்குமார் ஏலூர்பட்டியை சேர்ந்த டிரைவர் பொன்னுச்சாமி என்பவரை அழைத்து வருவதற்காக திருச்சி-சேலம் மெயின் ரோட்டில் சென்றார். பாலசமுத்திரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தம்பி ரமேஷ் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்