அருப்புக்கோட்டை,
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா சிங்கனேரி பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 31). சரக்கு வாகனத்தின் டிரைவரான இவர் அருப்புக்கோட்டையில் இருந்து ஏ.சி. மிஷினை ஏற்றிக்கொண்டு பந்தல்குடியில் சரக்கு ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சேதுராஜபுரம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியில் சரக்கு வாகனம் மோதியது. இதில் டிரைவர் முத்துமாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் தீபக் குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.