2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெறும்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-05-17 18:45 GMT


2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில், நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

நியாயப்படுத்தவில்லை

விஷ சாராய சாவு காரணமாக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்ததற்காக எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எத்தனையோ இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? எங்கள் ஆட்சியில் நடந்தது தவறுதான், அதை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை.

திராவிட மாடல் வெற்றி பெறும்

போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எங்களுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நாங்கள் அளித்த தேர்தல் அறிக்கையை மறுபதிப்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிக்கையாக அளித்து ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் தான் வெற்றி பெறும்

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், அன்பழகன், சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்