25-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-07-21 19:26 GMT

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

திரளாக பங்கேற்க...

அவரது உத்தரவின் பேரில் தமிழக அரசை கண்டித்து வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.வெங்கடாஜலம் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்