மெலட்டூர்:
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழ கள்ளிமேடு மேலத்தெரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்போது கிராம மக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை காலம் தொடங்குவதற்கு முன்பு கள்ளிமேடு கிராமத்தில் உள்ள மண்சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றிதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.