பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம்
ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து புகைப்படம்: நாகையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் போராட்டம்
நாகை புத்தூர் ரவுண்டானாவில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். நகர தலைவர் உதயச்சந்திரன் முன்னிலை வைத்தார். அப்போது புத்தூரில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் பா.ஜ.க. புகைப்படம் வெளியிட்டதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நவுஷாத், மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை, துணைத்தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.