சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-28 18:45 GMT


மயிலாடுதுறை அருகே சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடிந்து விழும் நிலையில்

மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட செருதியூர் ஊராட்சியில் கடந்த 2000-ம் ஆண்டு ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்ததால், தற்போது மாற்று இடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாகவே இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த பழமையான ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றாமல் உள்ளனர்.

இந்த கட்டிடம் அருகே குடியிருப்புகள் இருப்பதால் குழந்தைகள் அப்பகுதியில் விளையாடும்போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கலெக்டருக்கு கோரிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழுவிழந்து காணப்படும் இந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து செருதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்