ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறி வாலிபரின் செல்போனுக்கு ஓடிபி அனுப்பி ரூ.1 லட்சம் அபேஸ் உடனடியாக புகார் அளித்ததால் சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்

கடலூர் அருகே ரூ.10 லட்சம் லோன் தருவதாக கூறி வாலிபரின் செல்போனுக்கு ஓ.டி.பி. அனுப்பி ரூ.1 லட்சத்தை மர்மநபர் அபேஸ் செய்துள்ளார். இதற்கு உடனடியாக புகார் அளித்ததால், இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர்.

Update: 2023-06-30 18:50 GMT

கடலூர் அருகே உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் பிரகாஷ்(வயது 29). சம்பவத்தன்று பிரகாசை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த நபர், உங்களுக்கு ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு உங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண் விவரங்களை கூறும்படியும் தெரிவித்துள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய பிரகாஷ், அந்த நபரிடம் தனது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் தெரிவித்துள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு, வங்கி கணக்கில் இருந்து 97 ஆயிரத்து 542 ரூபாய் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது.

மீட்ட போலீசார்

இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் பிரகாசுக்கு, தன்னிடம் செல்போனில் பேசிய நபர் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே பிரகாஷ் இது குறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) துர்கா மற்றும் போலீசார் உடனடியாக வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு, பிரகாஷ் வங்கி கணக்கில் இருந்த எடுக்கப்பட்ட பணத்தை முடக்கினர். பின்னர் வங்கி அதிகாரிகள் உதவியுடன் அந்த பணத்தை போலீசார் மீட்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பணம் மீட்கப்பட்டதற்கான வங்கி ஆவணத்தை பிரகாசிடம் வழங்கினார். மேலும் துரிதமாக செயல்பட்டு வாலிபரின் பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை, சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்