அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது.

Update: 2022-06-14 16:56 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா கோவணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் டேவிட் (வயது 25). மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் இக்கிராமத்தில் உள்ள கண்மாயில் டேவிட் அழுகிய நிலையில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து அறிந்த திருவாடானை போலீசார், திருவாடானை வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறை, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்மாயில் மிதந்த டேவிட்டின் உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்