லாரி மோதி சமையல்காரர் பலி

நெல்லையில் லாரி மோதி சமையல்காரர் பலியானார்.

Update: 2023-05-23 19:14 GMT

பேட்டை:

நெல்லை பழைய பேட்டை சமூகரங்கபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). சமையல் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் தென்காசி மெயின் ரோட்டை கடந்த போது ஆலங்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி எதிர்பாராதவிதமாக பெருமாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, லாரியை ஓட்டிய நாங்குநேரி நெடுங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த வானமாமலை (28) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்