காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

காட்பாடியில் காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 16:39 GMT

காட்பாடி

காட்பாடி பாரதிநகர் விரிவு 5-வது தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 39), காண்டிராக்டர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்