கிட்டி வாய்க்கால் நீர் தேக்கம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சீதக்கமங்கலம் கிட்டி வாய்க்கால் நீர்த்தேக்கம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-30 18:45 GMT

குடவாசல்:

சீதக்கமங்கலம் கிட்டி வாய்க்கால் நீர்த்தேக்கம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிட்டி வாய்க்கால்

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் கிராமத்திற்கு கூகூர் திருமலை ராஜன் ஆற்றின் நீர்தேக்கத்திலிருந்து பிரியும் கிட்டி வாய்க்கால் பாசன வாய்க்காலாக உள்ளது. வாய்க்காலில் நீர் தேக்கம் கட்டும் பணி பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த நிலையில் நீர்த்தேக்கம் கட்டும் பணி முழுவதுமாக முடிக்கப்படாததால் விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 4 மாதம் ஆகியும் வாய்க்காலில் நீரை தேக்கி விதை விட முடியாமல் இப்பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்கும் வகையில் இரும்பு பலகை பொறுத்தி பணியை நிறைவு செய்து விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்