ரெயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும்

ஆரணி-நகரி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூறினார்.

Update: 2022-10-13 16:17 GMT

ஆரணி

ஆரணி-நகரி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை புதிய இரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில ஆர்ஜிதம் சம்பந்தமாக கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ெரயில் பாதை அமைய உள்ள இடத்தின் சம்பந்தமான நில உரிமையாளர்களிடம் அவர் கருத்து கேட்டார்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 கிராமங்களில் உள்ள நிலங்கள் வழியாக ெரயில் பாதை அமைகிறது. இதில் 30 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ரெயில் பாதை பணி

மீதம் உள்ள 3 கிராமங்களில் 43 ஹெக்டேர் நீளத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டி உள்ளது.

நில மதிப்பீடு குறித்து நில உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்து அவர்கள் கூறுகின்ற கருத்துக்களை ஏற்று அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிவாரணத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.

இன்னும் ஒரு மாதத்தில் அப்பணி முடிவடையும். அதற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) ெரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டவுன் பிளானிங் கமிட்டி கூட்டம் குறித்து கேட்டதற்கு அடுத்த மாதம் ஆரணியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் டவுன் பிளானிங் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்றார்.

அப்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்