காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்,
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அதனைகட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை தாங்கி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரீட்டாலதாபீட்டர், பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், வட்டார தலைவர் பாவாடை, முன்னாள் வட்டார தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் தாயுமானவர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாவட்ட துணை தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்
திண்டிவனம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். நகர துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கட், ஜானகிராமன், நகர செயலாளரும், வக்கீலுமான அஜீஸ், வக்கீல் பொன் ராஜா, ஊடகப் பிரிவு ஜெய்கணேஷ், டோமினிக் சேவியர், கலியபெருமாள், தில்குமார், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மணிப்பூர் அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி, கலவரத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.