கார் வழங்காத நிறுவனம் ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நாகர்கோவில் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

கார் வழங்காத நிறுவனம் ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நாகர்கோவில் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது

Update: 2022-07-22 18:25 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் வெள்ளமடத்தைச் சேர்ந்த அஜின் சந்தோஷ் என்பவர் கோவையைச் சேர்ந்த பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் ரூ.25 ஆயிரம் செலுத்தி வெள்ளை நிற கார் ஒன்றை முன்பதிவு செய்தார். ஆனால் பல நாட்களாகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் வேறு சில நபர்களுக்கு 10 புதிய கார்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அஜின் சந்தோஷ், நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் கோவையைச் சேர்ந்த பிரபல கார் விற்பனை நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட முன்பணம் ரூ.25 ஆயிரமும், நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.33 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்