இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 378 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-30 17:50 GMT

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 378 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

சிவகங்கை நகர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் சிவகங்கை பஸ் நிலையம் முன்பாக மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு நகர் செயலாளர் மருது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்்தனர். விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சந்திரன், கண்ணன், சகாயம், கங்கை சேகரன், சோலை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 36 பேரை போலீசார் கைது ெசய்தனர்.

378 பேர் கைது

அதேபோல மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில், தேவகோட்டை, திருவேகம்பத்தூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மானாமதுரையில் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 57 பேரும், காரைக்குடியில் சிவாஜி காந்தி தலைமையில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 86 பேரும், காளையார்கோவிலில் கோபால் தலைமையில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 105 பேரும், தேவகோட்டையில் காமராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 15 பேரும், திருவேகம்பத்தூரில் சரவணதேவி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 57 பேரும், திருப்பத்தூரில் காளிமுத்து தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 18 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் நடந்த இந்த போராட்டத்தில் மொத்தம் 150 பெண்கள் உள்பட 378 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்