இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்;
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நூறு நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு 8 வாரங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடன் வழங்கவும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைத்திட வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.