வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

வெள்ளிமலை வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-21 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விவசாயிகள் கிணறுகள் வெட்டவோ அல்லது விவசாயம் செய்யவோ வனத்துறையினர் அனுமதி மறுத்துவருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் விவசாயம் செய்வதற்கு அனுமதி மறுத்துவரும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று வெள்ளிமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்