ஓய்வு பெற்ற உதவியாளரை தனது காரில் அழைத்து சென்ற கலெக்டர்

ஓய்வு பெற்ற உதவியாளரை தனது காரில் கலெக்டர் அழைத்து சென்றார்.

Update: 2023-07-31 19:00 GMT


சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத். இவருக்கு உதவியாளராக (டபேதார்) பணிபுரிந்தவர் ராஜசேகரன். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதைதொடர்ந்து, ராஜசேகரனை கவுரவிக்கும் வகையில் கலெக்டர் ஆஷா அஜீத், தன்னுடைய காரில் ராஜசேகரனை அமர வைத்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை வழி அனுப்பி வைத்தார். கலெக்டரின் இந்த மனிதநேய செயலை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்து கலெக்டரை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்