தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை

வளர்ச்சி திட்ட அதிகாரி தகவல்தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை

Update: 2023-08-04 13:18 GMT

திருப்பூர்

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும் என்று மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி சவுமியா கூறினார்.

புத்திக்கூர்மை

தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் தாய்பாலூட்டுதலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உண்டாக்குவோம் என்ற மைய கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விநாயகமூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி சவுமியா பேசியதாவது:-

தாய்ப்பால் ஊட்டுதலால் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது. குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும். இவை குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது.

நோய் எதிர்ப்பு தன்மை

தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை பெருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதை தடுக்கும். தற்போது தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்