ரெட்டியார்சத்திரம் அருகே கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

ரெட்டியார்சத்திரம் அருகே கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை, தனது தந்தை கண்முன் பரிதாபமாக இறந்தது.

Update: 2022-07-10 19:18 GMT

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சில்வார்பட்டியை சோ்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 34). இவரது 1½ வயது குழந்தை சாதனா. இந்தநிலையில் நேற்று காலை பொன்னுச்சாமி வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். உடன் தனது குழந்தையையும் அழைத்து சென்றார்.

மளிகை பொருட்கள் வாங்கிய பிறகு பொன்னுச்சாமி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். எதிரே அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவர் காரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பொன்னுச்சாமியின் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்டன. இதில், மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுச்சாமியும், அவரது குழந்தை சாதனாவும் கீழே விழுந்தனர். அப்போது குழந்தை சாதனா மட்டும் காரின் சக்கரத்தில் சிக்கியது.

இதில் குழந்தை மீது காரின் சக்கரம் ஏறி இறங்கியது. அப்போது சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை பலியானது. பொன்னுச்சாமி காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்முன் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்