சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு
இந்த ரெயில் சென்ட்ரல்-மைசூரு இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது.
சென்னை,
சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கடந்த 12-ந்தேதி தொடங்கியது. புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த ரெயிலுக்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு கானப்படுகிறது.
'எக்சிகியூட்டிவ்' சேர்கார் என்ற 2 வகுப்புகள் இதில் உள்ளன. சேவை தொடங்கிய 10 நாளில் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இருந்து மைசூரு சென்ற ரெயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பில் சராசரியாக 147 சதவீதமும், சேர் காரில் 115 சதவீதம் நிரம்பின.
இதேபோல மைசூரில் இருந்து சென்ட்ரல் வந்த ரெயிலில் எக்ஸ்சிகியூட்டிவ் வகுப்பில் 125 சதவீதமும், சேர் காரில் 97 சதவீதமும் நிரம்பின. இந்த ரெயில் காட்பாடி மற்றும் பெங்களூருவில் மட்டும் நின்று செல்கிறது.
இடைநிறுத்தங்களில் இறங்கி ஏறும் பயணிகளின் அடிப்படையிலும் பயணம் செய்த மொத்த பயணிகள், இருக்கை வசதி அடிப்படையிலும் சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 1200 இருக்கைகள் உள்ளன.