அருமனை அருகே ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது

அருமனை அருகே ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

Update: 2023-05-12 18:38 GMT

அருமனை, 

அருமனை அருகே ஆற்றுப்பாலத்தில் இருந்து பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

விபத்து

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் மைதீன் முகமது. இவருடைய மகன் அபுபக்கர் சித்திக் (வயது 42). இவர் காபிக்காடு பகுதியில் புதிதாக கடை அமைக்க வேலை செய்து வந்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு கடையில் வேலைைய முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணி அளவில் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அந்த கார் அண்டுகோடு பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வரும் போது எதிர்பாராத விதமாக ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவர் வழியாக பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த அபுபக்கர் சித்திக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்