சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

Update: 2023-07-23 20:39 GMT

தேவூர்:-

ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 65). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று ஆனந்தராஜ், அவருடைய மனைவி அமுதா மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் சொகுசு காரில் நங்கவள்ளி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். தேவூர் அருகே அரசிராமணி செட்டிப்பட்டி வழியாக கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆனந்தராஜ் உள்பட 4 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் மற்றும் தேவூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்