அறச்சலூர் அருகே உள்ள ஓடக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). இவர் தனது மனைவியுடன் பூந்துறை ரோட்டில் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை பொன்னுசாமி ஓட்டிச்சென்றார். சென்னிமலை பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பொன்னுசாமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.