ஓசூர்
ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா பகுதியில் நேற்று மாலை, கியாஸ் டேங்கர் லாரி சென்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் டேங்கர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இந்த விபத்தின் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கார் மற்றும் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.