ஓசூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஓசூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாபு, விவசாயி. இவர் நேற்று மாலை காரில் ஓசூர் நோக்கி சென்றார். பண்டாஞ்சநேயர் கோவில் எதிரே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் வந்தபோது, நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாபு, கீழே குதித்து உயிர் தப்பினார். சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ஓசூர் - கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். என்ஜின் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.