சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்டுத் தர வேண்டும்

சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்டுத் தர வேண்டும்

Update: 2023-05-20 18:45 GMT

பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் நேதாஜி, மாவட்ட செயலாளர் விஜேந்திரன் ஆகியோர் தலைமையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கலெக்டர் அருண்தம்புராஜை நேற்று நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் உள்ள விசைப்படகில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த திருஞானம் மகன்கள் அருண்குமார் (வயது 38), பிரவீன்குமார் (28) ஆகியோர் தங்கி மீன்பிடி தொழிலை செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் தேங்காய்பட்டினம் விசைப்படகு மூலம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து மீன்பிடிதொழில் செய்து வந்தனர். கடந்த ஏப்ரல் 16- ந்தேதி கொச்சின் துறைமுகத்திலிருந்து அருண்குமார், பிரவீன்குமார் உள்பட 7 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மே 5-ந் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அகலிலட்சத்தீவு பகுதியில் அங்குள்ள போலீசார் மீனவர்கள் மற்றும் விசைப்படகை சிறைபிடித்து சென்றுள்ளனர். எனவே தமிழக அரசு சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்