தம்பியை தாக்கிய அண்ணனுக்கு வலைவீச்சு

களக்காடு அருகே தம்பியை தாக்கிய அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-20 21:40 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வீ.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்கள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும், இவரது அண்ணன் வினோத்துக்கும் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ரமேசுக்கும், வினோத்துக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத், ரமேஷை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வினோத்தை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்