குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழி அருகே குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.

Update: 2022-07-08 18:30 GMT

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீர்காழி அருகே குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.

குடிநீர் வினியோகம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு எடக்குடி வடபாதி ஊராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து கடற்கரை கிராமங்களான வானகிரி, பூம்புகார், கீழமூவக்கரை, மங்கைமடம், பெருந்தோட்டம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், திருநகரி, திருவெண்காடு, ராதாநல்லூர், மங்கைமடம், திருவாலி, நாங்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழாயில் உடைப்பு

இந்த நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி மணல்மேடு சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. கடந்த ஒரு வாரமாக இவ்வாறு குடிநீர் வெளியேறி வீணானது. மேலும் குடிநீர் வெளியேறியதால் அந்த பகுதி சாலை சேதம் அடைந்தது. இதுகுறித்த செய்தி கடந்த 4-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது.

சரி செய்யப்பட்டது

இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர்.. இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்