நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் உடைக்கப்பட்ட மதகுகளை சீரமைக்க வேண்டும்

நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் உடைக்கப்பட்ட மதகுகளை சீரமைக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-27 17:36 GMT

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி கடந்த ஆண்டு நிரம்பியது. அப்போது பல இடங்களில் ஏரிக்கரை பழுதாகி பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது. இதனால் ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனால் செட்டிக்குப்பம் அருகே கோடிசெல்லும் பகுதியில் உள்ள மதகுகளை உடைத்து சுமார் 40 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த மதகுகளை கட்டவில்லை. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் பல மாதங்களாக வீணாக செல்கிறது.

இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் இராசி.தலித்குமார், வேலூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் நெல்லூர்பேட்டை ஏரியில் மதகு உடைக்கப்பட்டதை சரிசெய்யவும், கரையை பலப்படுத்த பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் ஏரி தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் ஏரிக் கரையை பலப்படுத்தி மதகுகளை சீரமைக்க வேண்டும். இதனை தவிர நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேற்று கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அந்த மனுவில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்