பாதியில் நிற்கும் பாலம்... உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்..!

கொசஸ்தலை ஆற்றில் இறங்கி, ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-17 02:59 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே கட்டி முடிக்கப்படாத பாலத்தால், ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி, ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விடையூர் - கலியனூரை இணைக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

ஆற்றில் இறங்கி ஏணி மூலம் பாலத்தில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்