பாய்ந்த புது மாப்பிள்ளை...! முதலிரவில் பயந்து மயங்கி விழுந்த மணப்பெண்..!- புகார் கொடுத்த மாமியார்

முதலிரவில் பயந்து மயங்கி விழுந்த மணப்பெண். இது குறித்து மணப்பெண் தாய் பரமேஸ்வரி போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகக்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

Update: 2022-06-30 08:42 GMT

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி. இவருக்கு 26 வயதில் நளினி என்ற மகள் உள்ளார். இவருக்கும் நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) இரு வீட்டார் முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 27ஆம் தேதி திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகக்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் பரமேஸ்வரி கூறியிருப்பதாவது: -

திருமணத்திற்கு வரதட்சணையாக 12 பவுன் நகை , பைக் மற்றும் ரூ 3 லட்சத்திற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினோம். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டில் எங்கள் பெண்ணுக்கு முதலிரவு நடந்தது. என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மகளின் அலறல் சப்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர். ஆனால் புதுமாப்பிள்ளை ராஜ்குமார் தப்பிவிட்டார். உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்த என் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்மகள் மனநலம் பாதித்தவரை போல் நடந்துக் கொள்கிறார்.எனவே மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உடல் முழுவதும் காயங்களுடன் சிகிச்சை பெறும் நளினி, அந்த சம்பவத்தை நினைத்து மிகவும் அச்சத்துடனே இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

உண்மையில் ராஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவரா, கல்யாணம் பண்ணா சரியாகிடும் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் தங்களது மகனுக்கு நளினியை திருமணம் செய்து வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்