தண்டவாளத்தை கடந்த சிறுவன் ரெயில்மோதி பலி

வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடந்த சிறுவன் ரெயில்மோதி பலியானான்.

Update: 2022-06-05 13:48 GMT

ஜோலார்பேட்டை

வாணியம்பாடி அருகே உள்ள சாலமாபாத் மசூதி தெருவை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மகன் ஆசிப் கான் (வயது 17). இவன் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றான். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி செல்லும் மார்க்கத்தில் சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்