மரத்தில் வாலிபர் பிணம் -சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்று கரையோரம் மரத்தில் வாலிபர் பிணமாக தொங்கினார், விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது

Update: 2023-01-31 20:25 GMT

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்று கரையோரம் மரத்தில் வாலிபர் ஒருவரது உடல் தூக்கில் தொங்கியது. இது குறித்து அறிந்த திருவேடகம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ், சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பிரசாந்த் (வயது 22) என்பதும், இவர் திருவேடகம் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் 3 நாட்களாக தங்கி இருந்ததும், இந்த நிலையில் மரத்தில் பிணமாக தொங்கியதும் தெரிய வந்தது. அவரது சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்