வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
திங்கள்சந்தை அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 53), கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி திருவனந்தபுரத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அதைதொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராதாகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டு படுக்கை அறை கட்டிலில் ராதாகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் மது பாட்டில்களும் கிடந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராதாகிருஷ்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.