ஏரலில் கருவேல மரங்களை பா.ஜனதாவினர் அகற்றினர்

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஏரலில் கருவேல மரங்களை பா.ஜனதாவினர் அகற்றினர்

Update: 2022-09-18 18:45 GMT

ஏரல்:

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி ஏரல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏரல் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள வாய்க்காங்கரை ஓரத்தில் உள்ள கருவேலமரங்களை அகற்றி பனைவிதைகளை விதைத்தனர். மேலும் 3 மரக்கன்றுகள் நட்டனர். ஏரல் பா.ஜனதா ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மகேஸ்வரி, வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் ராகவன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* சாயர்புரம் மெயின் பஜாரில் சாயர்புரம் நகர பா.ஜனதா கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். ஏரல் ஒன்றிய விவசாய அணி தலைவர் பெரியசாமி, மாவட்ட ஆலய மீட்பு பிரிவு செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சாயர்புரம் பஜாரில் பா.ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வியாளர் பிரிவு தலைவர் சங்கரநாராயணன், சாயர்புரம் வார்டு தலைவர் சேகர் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

* பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் ஆறுமுகநேரியில் ரத்ததான முகாம் நடத்தினர். சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன், ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகாராஜன், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்